முதல்வர் அலுவலக பணியாளர்கள் 4 பேருக்கு கொரோனா!

 

முதல்வர் அலுவலக பணியாளர்கள் 4 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரேநாளில் 2,141பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52,334 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,017ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் நேற்று ஒரேநாளில் 842பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28,641 ஆக உயர்ந்துள்ளது.

முதல்வர் அலுவலக பணியாளர்கள் 4 பேருக்கு கொரோனா!

குறிப்பாக சென்னையில் தான் அதிக அளவு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதனால் தலைநகரான சென்னையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இருப்பினும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது.கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மீண்டும் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

முதல்வர் அலுவலக பணியாளர்கள் 4 பேருக்கு கொரோனா!

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் நான்கு பேருக்கு பற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வர் அலுவலக துணை செயலாளர், இரண்டு அலுவலக உதவியாளர் மற்றும் ஒரு ஓட்டுநருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் இந்த நான்கு பேரையும் சேர்ந்த மற்ற குடும்ப உறுப்பினர்களையும், பணியாளர்களையும் தனிமை படுத்தும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

இதனிடையே தலைமைச் செயலக முதலமைச்சர் அலுவலகம் பிரிவு முதுநிலை தனி செயலாளர் தாமோதரன் உடல்நலக்குறைவால் காலமானது குறிப்பிடத்தக்கது.