நல வாரியத்தில் பதிவு செய்யாத திருநங்கைகளுக்கும் ரூ.4 ஆயிரம் நிதியுதவி!

 

நல வாரியத்தில் பதிவு செய்யாத திருநங்கைகளுக்கும் ரூ.4 ஆயிரம் நிதியுதவி!

கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்கி வருகிறது. நலவாரியத்தில் பதிவு செய்த திருநங்கைகளுக்கும் நிதி உதவி வழங்கப்படுகிறது. முதல் தவணை கடந்த மாதம் கொடுக்கப்பட்ட நிலையில், இரண்டாம் தவணை இந்த மாதம் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில், குடும்ப அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கிரேஸ் பானு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நல வாரியத்தில் பதிவு செய்யாத திருநங்கைகளுக்கும் ரூ.4 ஆயிரம் நிதியுதவி!

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அடையாள அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரண உதவி வழங்கப்படும். குடும்ப அட்டை வைத்திருக்கும் 2,956 பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 8493 பேருக்கு நிதியுதவி வழங்கப்படும் என அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், அரசு வழங்கும் நிதியுதவியை தவறாக பயன்படுத்த கூடாது என்பதால் திருநங்கைகளின் பெயர் மற்றும் முகவரியை தெரிவிக்க வேண்டுமென அறிவுறுத்தினர். மேலும், நிதியுதவி கிடைக்காதவர்கள் குறித்து நீதிமன்றம் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக வழக்கு விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.