கொரோனா நிதி விவரங்களை தெரிவிப்பதில் என்ன சிரமம்? நீதிமன்றம் கேள்வி

 

கொரோனா நிதி விவரங்களை தெரிவிப்பதில் என்ன சிரமம்? நீதிமன்றம் கேள்வி

கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற நிதியுதவி அளிக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் நரேந்திர மோடியும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க பலரும் நிதியுதவி அளித்தனர். குறிப்பாக சமூக செயற்பாட்டாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் நாடு முழுவதும் நிதி திரட்டப்பட்டது. முதல்வர் நிவாரண நிதிக்கு பல கோடி ரூபாய் நிதி கிடைத்த நிலையில் அதனை அரசு என்ன செய்தது என்பது தொடர்பாக பல கேள்விகள் எழுந்து வந்தது. அதனால் அந்த விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது.

கொரோனா நிதி விவரங்களை தெரிவிப்பதில் என்ன சிரமம்? நீதிமன்றம் கேள்வி

இந்த நிலையில் வழக்கறிஞர் கற்பகம் சென்னை உயர்நீதிமன்றத்தில், நன்கொடையாக வந்த தொகை குறித்து இணையத்தளத்தில் எந்த விவரமும் வெளியிடப்படவில்லை என வழக்குத்தொடர்ந்தார். இன்று அந்த வழக்கு விசாரணை வந்த போது கொரோனா நிதியாக எவ்வளவு பெறப்பட்டது, எவ்வளவு வழங்கப்பட்டது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க சிரமம் என்னவென்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு நாளை விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.