அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடனுக்கு கொரோனாவா?

 

அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடனுக்கு கொரோனாவா?

அமெரிக்காவில் தேர்தல் அடுத்த மாதம் 3-ம் தேதி நடக்கவிருக்கிறது. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடனுக்கு கொரோனாவா?

ட்ரம்பின் உதவியாளர்க்கு கொரோனா தொற்று உறுதியானதால், ட்ரம்ப்க்கும் அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப்க்கும் பரிசோதனை செய்ததில் இருவரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்குப்பட்டு, வெள்ளை மாளிகை திரும்பினார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறதா என்ற விவாதம் எழும்பியுள்ளது. ஏனெனில், ஜோ பைடனும் ஒரே விமானத்தில் சென்ற ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதனால், ஜோ பைடனுக்கும் தொற்று பரவியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடனுக்கு கொரோனாவா?

அதனால், உடனடியாக ஜோ பைடனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு ஜோ பைடனுக்குக் கொரோனா இல்லை என்பதாகவே வந்திருப்பதாக மருந்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் தன்னைத்ட் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.