கோயம்பேடு சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா!

 

கோயம்பேடு சந்தையில்  வியாபாரிகளுக்கு கொரோனா!

கோயம்பேடு சந்தையில் உள்ள அனைத்து கடைகளையும் திறக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வியாபாரிகள், பொதுமக்கள் என கொரோனா பரவல் அதிகரித்ததால் கடந்த மே மாதம் கோயம்பேடு சந்தை மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து வியாபாரிகள் தொடர்ந்து விடுத்த கோரிக்கையின் பேரில் கடந்த 28ம் தேதி கோயம்பேடு மார்க்கெட் திறக்கப்பட்டது.

கோயம்பேடு சந்தையில்  வியாபாரிகளுக்கு கொரோனா!

இந்நிலையில் கோயம்பேடு காய்கறிச்சந்தையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகமாகி வருவதாக செய்திகள் வெளியாகின. தொழிலாளிகள், வியாபாரிகள் என 50 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது. 2000 ஆயிரம் கடைகளில் வெறும் 190 கடைகள் தான் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டு தொற்று பரவுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோயம்பேடு சந்தையில்  வியாபாரிகளுக்கு கொரோனா!

அத்துடன் கோயம்பேடு சந்தைக்குள் செல்ல ஒரே வழி மட்டுமே உள்ளதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் மீண்டும் கோயம்பேடு சந்தை மூடப்படுமா என்ற அச்சம் வியாபாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.