வேலைக்கு அழைத்துவரப்பட்ட 34 பேருக்கும் கொரோனா! – ஒடிஷாவுக்குள் வர தடை விதித்த அரசு

 

வேலைக்கு அழைத்துவரப்பட்ட 34 பேருக்கும் கொரோனா! – ஒடிஷாவுக்குள் வர தடை விதித்த அரசு

34 பேரை வெளி மாநிலங்களிலிருந்து வேலைக்கு எடுத்த தனியார் நிறுவனம்! – அனைவருக்கும் கொரோனா உறுதியானதால் அதிர்ச்சி
ஒடிஷாவில் தனியார் நிறுவனம் ஒன்று வெளி மாநிலங்களைச் சேர்ந்த 34 பேரை வேலைக்கு எடுத்துள்ளது. அவர்களுக்கு தற்போது கொரோனா உறுதியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலைக்கு அழைத்துவரப்பட்ட 34 பேருக்கும் கொரோனா! – ஒடிஷாவுக்குள் வர தடை விதித்த அரசு
இது தொடர்பாக புவனேஷ்வர் மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் புவனேஷ்வரில் இயங்கிவரும் தொழில் நிறுவனம் ஒன்று வெளிமாநிலங்களைச் சேர்ந்த 34 பேரை பணிக்கு சேர்த்தது. புவனேஷ்வர் அழைத்து வரப்பட்ட அவர்கள் விதிமுறைபடி தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த 34 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.

வேலைக்கு அழைத்துவரப்பட்ட 34 பேருக்கும் கொரோனா! – ஒடிஷாவுக்குள் வர தடை விதித்த அரசுஇதனால், எந்த ஒரு தொழில் நிறுவனம், மருத்துவமனை, கட்டுமான நிறுவனம், அரசு – தனியார் ஒப்பந்ததாரர்கள் யாரும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களை ஒடிஷாவுக்கு வேலைக்கு அழைத்து வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஒருவேளை வெளி மாநிலங்களிலிருந்து அழைத்து வந்து, அவர்களைத் தனிமைப்படுத்தும்போது கொரோனா உறுதியானால் அவர்களுக்கான சிகிச்சை கட்டணத்தை அந்த நிறுவனமே ஏற்க வேண்டும்” என்று கூறியுள்ளது.