சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனாவா? : துணைவேந்தர் பதில்!

சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனாவா? : துணைவேந்தர் பதில்!

சென்னை ஐஐடியில் முதன்முதலில் 4 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகி, அவர்கள் மூலமாக தற்போது 180க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த கல்லூரி கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா பல்கலைக் கழகம் உட்பட பிற கல்லூரிகளிலும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனாவா? : துணைவேந்தர் பதில்!

விடுதியில் தங்கி இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சென்னை மாநகராட்சியை சேர்ந்த மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து வருகின்றனர். விடுதிகள் மட்டுமல்லாது மேன்ஷனில் தங்கி இருப்பவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனாவா? : துணைவேந்தர் பதில்!

இந்த நிலையில், சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார். கிண்டி மற்றும் மெரினா வளாகத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாளை பரிசோதனை நடைபெற உள்ளதாகவும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.