சிங்கங்களுக்கு கொரோனா : வண்டலூரில் முதல்வர் ஆய்வு!

 

சிங்கங்களுக்கு கொரோனா : வண்டலூரில் முதல்வர் ஆய்வு!

சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

சிங்கங்களுக்கு கொரோனா : வண்டலூரில் முதல்வர் ஆய்வு!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனா பாதிப்பால் 9 வயது பெண் சிங்கம் ஒன்று உயிரிழந்தது. சில நாட்களாக சிங்கத்திற்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில் நீலா என்ற ஒன்பது வயதுள்ள பெண் சிங்கம் கடந்த 3ம் தேதி உயிரிழந்தது. மேலும் 9 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மே 26-ஆம் தேதி முதல் கொரோனா காரணமாக பூங்கா மூடப்பட்ட நிலையில் பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதனால் பணியாளர்கள் மூலமாக சிங்கங்களுக்கு தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சிங்கங்களுக்கு கொரோனா : வண்டலூரில் முதல்வர் ஆய்வு!

இந்நிலையில் சென்னை, வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வண்டலூர் பூங்காவில் தற்போது 8 சிங்கங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் ஆய்வு நடத்தினார். மற்ற விலங்குகளுக்கு தொற்று உள்ளதா என்பதை கண்டறியவும் உத்தரவிட்டுள்ளார்.