ஜிப்மர் மருத்துவமனையில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா : புற நோயாளிகள் பிரிவு அனைத்தும் மூடல்!

ஜிப்மர் மருத்துவமனையில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா : புற நோயாளிகள் பிரிவு அனைத்தும் மூடல்!

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 28,36,925 ஆக அதிகரித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மத்திய, மாநில அரசுகளால் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஜிப்மர் மருத்துவமனையில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா : புற நோயாளிகள் பிரிவு அனைத்தும் மூடல்!

அதன்படி புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வந்த வண்ணம் உள்ளனர். அதே சமயம் புதுச்சேரியில் இப்போது ஒவ்வொரு நாளும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகின்ற காரணத்தால் போதுமான அளவு சிகிச்சை அளிக்க முடியாமல் ஜிப்மர் மருத்துவமனை திணறி வருகிறது. இதனால் ஜிப்மர் கொரோனா வார்ட்டை 1000 படுக்கைகள் கொண்ட வார்டாக மாற்ற தொடர்ந்து கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளன.

ஜிப்மர் மருத்துவமனையில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா : புற நோயாளிகள் பிரிவு அனைத்தும் மூடல்!
இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர், செவிலியர் மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் வருகின்ற 24-08-2020 முதல் அவசர சிகிச்சை, குழந்தைகள் மற்றும் பெண்கள் பிரிவை தவிர புற நோயாளிகள் பிரிவு அனைத்தும் மூடப்படுவதாக அம்மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.