அமேசான் பணியாளர்களில் இத்தனை ஆயிரம் பேருக்கு கொரோனாவா?

 

அமேசான் பணியாளர்களில் இத்தனை ஆயிரம் பேருக்கு கொரோனாவா?

உலகளவில் 3 கோடியோ 44 லட்சத்து 95 ஆயிரத்து 499 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமே 63 லட்சத்து 97 ஆயிரத்து 896 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பேரிடர் அனைத்துத் துறையினருக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

அமேசான் நிறுவனம் உலகம் முழுவதும் ஆன்லைன் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனம். அதில் 10 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா காலத்தில் ஆன்லைன் விற்பனை முன்பிருந்ததை விடவும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. காரணம், மக்கள் பொது இடங்களுக்கு வருவதற்கு அச்சப்படுகிறார்கள். இன்னும் பல இடங்களில் லாக்டெளன் நடைமுறையிலும் இருக்கிறது.

அமேசான் பணியாளர்களில் இத்தனை ஆயிரம் பேருக்கு கொரோனாவா?

மொபைல், லேப்டாப் என்று அரிதாக ஆன்லைன் ஷாப்பிங் செய்தவர்கள்கூட மளிகை, காய்கறிகளைகூட ஆன்லைனில் வாங்க முனைப்பு காட்டிவருகிறார்கள். அதனால், அமேசான் போன்ற விற்பனை நிறுவனங்களின் தேவை முன்பை விட அதிகமாகி விட்டது.

அமேசான் நிறுவனம், தங்கள் ஊழியர்கள் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை தங்கள் பணியாளர்களில் 19,800 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் அளித்துள்ளது.

அமேசான் பணியாளர்களில் இத்தனை ஆயிரம் பேருக்கு கொரோனாவா?

பொதுவாக இதுபோன்ற பொருள் விற்பனை நிறுவனங்கள் பாதுகாப்பு விதிமுறைகளை மதிப்பதில்லை. தங்கள் ஊழியர்களைக் கண்காணிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனால், அமேசான் தங்கள் நிறுவனத்தின் நடைமுறைகளை வெளிப்படையாக அறிவித்துள்ளது. ஆயினும், இத்தனை ஆயிரம் ஊழியர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.