வேலூர் மாவட்டத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா!
Jul 3, 2020, 08:43 IST1593746019000
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,343 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 98,392ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் 57 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 20 பேர் தனியார் மருத்துவமனையிலும், 37 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,321 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை வேலூரில் 1,739 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 410 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.