இந்தியாவில் ஒரே நாளில் 75,760 பேருக்கு கொரோனா – உயிரிழப்பு 60 ஆயிரத்தைக் கடந்தது!

இந்தியாவில் ஒரே நாளில் 75,760 பேருக்கு கொரோனா – உயிரிழப்பு 60 ஆயிரத்தைக் கடந்தது!

இந்தியாவில் ஒரே நாளில் 75,760 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் ஒரே நாளில் 75,760 பேருக்கு கொரோனா – உயிரிழப்பு 60 ஆயிரத்தைக் கடந்தது!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 75,760 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து10,235 ஆக அதிகரித்துள்ளது. இதில் 25.23 லட்சம் பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 7,25,991 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் ஒரே நாளில் 75,760 பேருக்கு கொரோனா – உயிரிழப்பு 60 ஆயிரத்தைக் கடந்தது!

நேற்று ஒரே நாளில் 1023 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 60,472 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனா உயிரிழப்பு அடிப்படையில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் 62,076 உயிரிழப்புகளுடன் மெக்சிகோ மூன்றாவது இடத்தில் உள்ளது. தற்போதைய சூழலைப் பார்க்கும்போது இன்னும் 2, 3 நாளில் இந்தியா மெக்சிகோவை முந்திக்கொண்டு மூன்றாவது இடத்தை பிடிக்கும் வாய்ப்புள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 75,760 பேருக்கு கொரோனா – உயிரிழப்பு 60 ஆயிரத்தைக் கடந்தது!

அதே போல் மொத்த நோய்த் தொற்று எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. தினமும் 75 ஆயிரம், ஒரு லட்சம் நோயாளிகள் என்ற நிலையை இந்தியா அடைந்துவிட்டால் விரைவில் பிரேசிலை முந்திக்கொண்டு தொற்று எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தை பிடிக்கவும் வாய்ப்புள்ளது. அரசுகள் எப்போது நடவடிக்கை எடுக்குமோ!