ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு கொரோனா!

 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு கொரோனா!

மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.68 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அத்துடன் ஒரேநாளில் 904 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். அதிதீவிர கொரோனா பரவலால், உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இடத்தில் உள்ளது.தமிழகத்தை பொறுத்தவரையில் நேற்றைய நிலவரப்படி, ஒரேநாளில் 6,618 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 33ஆயிரத்து 434ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,908 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு கொரோனா!

இந்நிலையில் மதுரை திருப்பாலை காயத்ரி நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 4 குழந்தைகள் உட்பட 7 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர்கள் அனைவருக்கும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு கொரோனா!

ஏற்கனவே ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசால் விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் டீக்கடைகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி, ஓட்டல்களில் இரவு 11 மணி வரை அமர்ந்து சாப்பிட அனுமதி, திருமண நிகழ்வுகளில் 100 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.