இந்தியாவில் ஒரே நாளில் 61,408 பேருக்கு கொரோனா!

 

இந்தியாவில் ஒரே நாளில் 61,408 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,408 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,408 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. 836 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 31,06,349 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 61,408 பேருக்கு கொரோனா!

இதில் 23,38,036 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 57,524 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 57,458 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 61,408 பேருக்கு கொரோனா!


உலக அளவில் 56.8 லட்சம் தொற்று நோயாளிகளுடன் அமெரிக்கா முதல் இடத்திலும், 36,05,783 நோயாளிகளுடன் பிரேசில் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. உயிரிழப்பைப் பொறுத்தவரையில் 1.76 லட்சம் உயிரிழப்புகளுடன் அமெரிக்கா முதல் இடத்திலும், 1.14 லட்சம் உயிரிழப்புடன் பிரேசில் இரண்டாவது இடத்திலும், மெக்சிகோ 60,480 உயிரிழப்புகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. 57,524 உயிரிழப்புகளுடன் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 61,408 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் விரைவில் உயிரிழப்பில் மூன்றாவது இடத்தையும், அதிக தொற்று உள்ள நாடுகள் பட்டியலில் பிரேசிலை முந்தி இரண்டாவது இடத்தையும் பிடிக்கும் துரதிஷ்டமான வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.