ஐஐடியில் மேலும் 6 பேருக்கு கொரோனா : உயரும் தொற்று எண்ணிக்கை!

 

ஐஐடியில் மேலும் 6 பேருக்கு கொரோனா : உயரும் தொற்று எண்ணிக்கை!

சென்னை ஐஐடியில் மேலும் 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஐஐடியில் மேலும் 6 பேருக்கு கொரோனா : உயரும் தொற்று எண்ணிக்கை!

சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் கடந்த 9ம் தேதி 4 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 444 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 87 மாணவர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் மூலம் நேற்று முன்தினம் வரை ஐஐடியில் கொரோனா தொற்று இருப்போரின் எண்ணிக்கை 104 ஆக இருந்தது.

ஐஐடியில் மேலும் 6 பேருக்கு கொரோனா : உயரும் தொற்று எண்ணிக்கை!

இந்நிலையில் சென்னை ஐஐடி வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘சென்னை ஐஐடியில் மேலும் 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை 183 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் தொற்று எண்ணிக்கை கூடியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.