தஞ்சையில் 57 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா – விசாரணை குழு அமைப்பு

 

தஞ்சையில் 57 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா – விசாரணை குழு அமைப்பு

தஞ்சை

தஞ்சை அம்மாபேட்டை பள்ளியில் 57 மாணவிகளுக்கு கொரோனா பரவியது குறித்து, விசாரிக்க குழு அமைத்துள்ளதாக, ஆட்சியர் கோவிந்தாராவ் தெரிவித்தார்.

தஞ்சை அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அண்மையில் மாணவி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், பிற மாணவிகள், ஆசிரியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பள்ளி மாணவிகள், ஒரு ஆசிரியை உள்பட மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து, பள்ளிக்கு 2 வாரம் விடுமுறை அளித்த மாவட்ட நிர்வாகம், பள்ளி அமைந்துள்ள பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்தது. இந்த நிலையில், நேற்று அம்மாபேட்டையில் உள்ள பள்ளியில் பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனையை ஆட்சியர் கோவிந்தாராவ் பார்வையிட்டு, ஆய்வுசெய்தார்.

தஞ்சையில் 57 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா – விசாரணை குழு அமைப்பு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளியில் உள்ள 1,200 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், தொடர்ந்து, சுகாதாரத் துறை முகாம் அமைத்து பள்ளியின் அருகில் உள்ளவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதேபோல், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 24 கிராமங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து, மாணவிகளின் பெற்றோர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் ஆட்சியர் கோவிந்தாராவ் கூறினார்.

மேலும், பள்ளியில் கொரோனா பரவியது குறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட குழுஅமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்த ஆட்சியர் கோவிந்தாராவ், சோதனையில் எடுக்கப்பட்ட கொரோனா மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவு கூறினார்