லண்டனில் இருந்து டெல்லி வந்த 5 பேருக்கு கொரோனா: புதிய வகை கொரோனவால் அச்சம்!

 

லண்டனில் இருந்து டெல்லி வந்த 5 பேருக்கு கொரோனா: புதிய வகை கொரோனவால் அச்சம்!

பிரிட்டனில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தெற்கு இங்கிலாந்து பகுதிகளில் வேகமாக அந்த வைரஸ் பரவி வருவதால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் வைரஸ் பாதிப்பை விட 70% வேகமாக பரவும் தன்மைக் கொண்டதாக கண்டறியப்பட்டிருப்பதால் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அந்நாட்டில் பொதுமுடக்கம் போடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பிற நாடுகளுக்கும் பரவுவதை தடுக்கும் பொருட்டு, ஐரோப்பிய நாடுகள் பிரிட்டன் உடனான போக்குவரத்து சேவையை முடக்கிவிட்டன.

லண்டனில் இருந்து டெல்லி வந்த 5 பேருக்கு கொரோனா: புதிய வகை கொரோனவால் அச்சம்!

அந்த வகையில் இந்தியாவிலும், 31ம் தேதி வரை பிரிட்டன் விமானங்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், லண்டனில் இருந்து டெல்லி வந்த 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மொத்தமாக 266 பயணிகளில், 5 பேருக்கு கொரோனா உறுதியானதால் எஞ்சியுள்ளவர்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் எந்த வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.