5 செவிலியர்களுக்கு கொரோனா : மூடப்பட்ட அரசு மருத்துவமனை!

5 செவிலியர்களுக்கு கொரோனா : மூடப்பட்ட அரசு மருத்துவமனை!

தஞ்சை அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனை மூடப்பட்டது.

5 செவிலியர்களுக்கு கொரோனா : மூடப்பட்ட அரசு மருத்துவமனை!

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இங்கு அண்மையில் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் பணியில் இருந்த நான்கு செவிலியர்கள், ஒரு லேப் டெக்னீசியன் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக திருப்பனந்தாள் அரசு மருத்துவமனை மூடப்பட்டது. அத்துடன் அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. செவிலியர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டனர்.

5 செவிலியர்களுக்கு கொரோனா : மூடப்பட்ட அரசு மருத்துவமனை!

அத்துடன் திருப்பனந்தாள் கடைத் தெருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது . இதனால் தனியார் கல்லூரியில் உள்ள சிகிச்சை மையத்திற்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். தஞ்சாவூரில் இதுவரை 38,057 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 433 பேர் உயிரிழந்துள்ளனர்.