வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேலும் 4 சிங்கங்களுக்கு கொரோனா!

 

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேலும் 4 சிங்கங்களுக்கு கொரோனா!

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு இந்த மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதாக பூங்கா நிர்வாகம் அறிவித்தது. அவற்றில் 9 வயதான நீலா என்ற பெண் சிங்கம் கடந்த மூன்றாம் தேதி உயிரிழந்தது. இந்த சிங்கத்தின் ரத்த மாதிரி உத்தரபிரதேசத்தில் உள்ள கால்நடை ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வில் அந்த சிங்கத்திற்கு கொரோனா தொற்றுடன், கேனைன் டிஸ்டெம்பர் எனும் தொற்று இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பத்மநாபன் என்ற ஆண் சிங்கமும் கடந்த நான்கு நாட்களுக்கு முன் உயிரிழந்தது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேலும் 4 சிங்கங்களுக்கு கொரோனா!

இந்நிலையில் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேலும் 4 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும், இந்த 4 சிங்கங்களுக்கும் இந்தியாவில் வேகமாக பரவி வரும் டெல்டா வைரஸ் கொரோனா இருப்பது உறுதியாகியிருப்பதாகவும் பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளது.