மதுரையில் ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா உறுதி : அச்சத்தில் மக்கள்!

 

மதுரையில் ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா உறுதி : அச்சத்தில் மக்கள்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,713 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,335 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 68 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 23பேர் தனியார் மருத்துவமனையிலும், 45 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,025ஆக அதிகரித்துள்ளது.  இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 51,699பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா உறுதி : அச்சத்தில் மக்கள்!

இதனையடுத்து கொரோனா அதிகமாகப் பரவியுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை மற்றும் தேனியில் ஜூன் 30 ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமலில் இருக்கிறது. இருப்பினும் அங்கு பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

மதுரையில் ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா உறுதி : அச்சத்தில் மக்கள்!

இந்நிலையில் மதுரையில் ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,003 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் மதுரை அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.