ஒரே கிராமத்தில் 28 பேருக்கு கொரோனா! சிகிச்சைக்கு செல்ல மறுத்து வீட்டைப்பூட்டிவிட்டு தலைமறைவு!

 

ஒரே கிராமத்தில் 28 பேருக்கு கொரோனா! சிகிச்சைக்கு செல்ல மறுத்து வீட்டைப்பூட்டிவிட்டு தலைமறைவு!

ஒரே கிராமத்தைச் சேர்ந்த 28 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் பரிசோதனை முடிவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி சிகிச்சைக்கு வர மறுத்ததுடன், வீட்டைப் பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பேராவூரணி அருகேயுள்ள சொர்ணக்காடு மற்றும் கழனிவாசல் ஊராட்சி ஆகிய இரு இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் செப்டம்பர் 22-ம் தேதி கொரோனா நோய்த்தொற்று கண்டறிவதல் மற்றும் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஒரே கிராமத்தில் 28 பேருக்கு கொரோனா! சிகிச்சைக்கு செல்ல மறுத்து வீட்டைப்பூட்டிவிட்டு தலைமறைவு!

இரண்டு முகாம்களிலும் சேர்த்து இருநூறுக்கு மேற்பட்டோருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் பரிசோதனை முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளிவந்தன. அதன்படி, சொர்ணக்காடு கிராமத்தில் எடுக்கப்பட்ட சளி மாதிரியில் அதே கிராமத்தைச் சேர்ந்த 10 பேருக்கும், பேராவூரணி புதுரோட்டைச் சேர்ந்த இருவருக்கும் என 12 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. அதேபோல, கழனிவாசலில் எடுக்கப்பட்ட சளி மாதிரியில் அதே கிராமத்தைச் சேர்ந்த 28 பேருக்கும், வீரராகவபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் என மொத்தம் 29 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

ஒரே கிராமத்தில் 28 பேருக்கு கொரோனா! சிகிச்சைக்கு செல்ல மறுத்து வீட்டைப்பூட்டிவிட்டு தலைமறைவு!

சொர்ணக்காடு கிராமத்தில் நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் அனைவரும் சுகாதாரத்துறையினரால் ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை தனிமைப்படுத்துதல் மையம் மற்றும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால், கழனிவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், பரிசோதனை முடிவுகள் தவறாக வந்துள்ளதாகவும், தங்களுக்கு எந்தவித நோய் அறிகுறியும் இல்லை என்றும் சொல்லிவிட்டு, பரிசோதனை முடிவில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி சிகிச்சைக்கு வர மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, பேராவூரணி வட்டாட்சியர் ஜெயலட்சுமி, சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமலிங்கம் உள்ளிட்ட வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் கழனிவாசல் கிராமத்தில் முகாமிட்டு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஒரே கிராமத்தில் 28 பேருக்கு கொரோனா! சிகிச்சைக்கு செல்ல மறுத்து வீட்டைப்பூட்டிவிட்டு தலைமறைவு!

அதிகாரிகளின் நயமான பேச்சுக்கு அக் கிராம மக்கள் மசியவில்லை. மீண்டும் பரிசோதனை நடத்தி கொரோனா நோய்த்தொற்று உறுதியானால் மட்டுமே சிகிச்சைக்கு வரமுடியும் என அக் கிராம மக்கள் உறுதிபட தெரிவித்துவிட்டனர்.

இதையடுத்து ஒன்றியக்குழுத் தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் அக் கிராமத்தில் முகாமிட்டதைத் தொடர்ந்து, கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட 28 பேரும் தங்களது வீடுகளைப் பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.

இதனால் இப்பகுதியில் மேலும் கொரோனா தொற்று பரவக்கூடும் என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரவித்துள்ளனர்.