பெங்களூருவில் மேலும் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா? – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கோட்டை விட்ட கர்நாடக அரசு

 

பெங்களூருவில் மேலும் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா? – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கோட்டை விட்ட கர்நாடக அரசு

கொரோனாத் தொற்று குறைவாகவே உள்ளது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கர்நாடக அரசு கோட்டைவிட்டதால் தற்போது பெங்களூரு நகரத்தில் மட்டும் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்தியாவில் மும்பை, சென்னை, டெல்லி, கொல்கத்தாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. பெருநகரங்களுக்கு இணையாக மக்கள் தொகை கொண்ட பெங்களூருவில் கொரோனாத் தொற்று மிகக் குறைவாகவே இருந்தது. அதே நேரத்தில் தொற்று அதிகரித்து வருகிறது, உடனே ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், ஊரடங்கு தேவையில்லை என்று எடியூரப்பா கூறினார்.

பெங்களூருவில் மேலும் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா? – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கோட்டை விட்ட கர்நாடக அரசுதற்போது அங்கு பெங்களூருவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 13,882 ஆக உள்ளது. ஜூலை 9ம் தேதி மட்டும் பெங்களூருவில் 1373 பேருக்கு புதிதாக கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது என்று அரசு அறிவித்துள்ளது. எம்.எல்.ஏ, எம்.எல்.சி, எம்.பி-க்களுக்கும் கூட கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதுதவிர மேலும் 12,000ம் பேருக்கு கொரோனாத் தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வந்த இந்த 12 ஆயிரம் பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் முடிவுகள் வெளியாகவில்லை. கொரோனா உறுதியாகாததால் இவர்களை வீட்டிலேயே தனிமையில் இருக்கும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். அச்சம் காரணமாக பலர் தனியார் மருத்துவமனைகளை நாடியுள்ளனர். அங்கும் படுக்கைகள் நிரம்பிவிட்டதால் புதிதாக யாருக்கும் சிகிச்சை கொடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.

பெங்களூருவில் மேலும் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா? – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கோட்டை விட்ட கர்நாடக அரசுபெங்களூரு நகரத்தில் கடந்த மூன்று மாதங்களில் கொரோனா தொற்று மிகக் குறைவாகவே இருந்தது. அப்போது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அதிக அளவில் படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால் அரசு அதை செய்யத் தவறியதால் இப்போது வெளியே 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர். இவர்கள் எத்தனை பேருக்கு கொரோனாவை பரப்பி விடுவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது.