வேகமாக பரவும் கொரோனா : பிளஸ் 1 மாணவர் சேர்க்கையை ஒருபுறம் ஆரம்பித்த தனியார் பள்ளிகள்!

 

வேகமாக பரவும் கொரோனா : பிளஸ் 1 மாணவர் சேர்க்கையை ஒருபுறம் ஆரம்பித்த தனியார் பள்ளிகள்!

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா ஊரடங்கால் கடைசி கல்வியாண்டே இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை மாதம் முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

வேகமாக பரவும் கொரோனா : பிளஸ் 1 மாணவர் சேர்க்கையை ஒருபுறம் ஆரம்பித்த தனியார் பள்ளிகள்!

பொதுவாக பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் எந்த மாவட்டம், எந்த பள்ளி அதிக மதிப்பெண் கொண்ட மாணவர்களை தக்கவைத்துள்ளது என்ற பெரும் போட்டி நிலவும். ஆனால் இந்த முறை தமிழக அரசு பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்ததையடுத்து மதிப்பெண் ரீதியான எந்த ஒரு போட்டியும் பள்ளிகளுக்கிடையே இல்லை . இதனால் ஏற்கனவே தங்களிடம் படித்த மாணவர்களை பள்ளியில் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் பள்ளி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகிறது.

வேகமாக பரவும் கொரோனா : பிளஸ் 1 மாணவர் சேர்க்கையை ஒருபுறம் ஆரம்பித்த தனியார் பள்ளிகள்!

அதனால் கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகள் எப்போது திறக்கும் என்று எந்த முடிவையும் தமிழக அரசு இன்னும் வெளியிடாமல் இருக்கும் நிலையில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களின் பெற்றோருக்கும் சில தனியார் பள்ளிகள் குறுஞ்செய்தி மூலமாக பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் சேர்க்கையை தொடங்கியுள்ளனர். 11 ஆம் வகுப்புக்கான பாடப்பிரிவு, நிகழ்வு ஆண்டுக்கான கட்டணம், சீருடை ஆகியவை குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது. சில பள்ளிகள் மாணவர் சேர்க்கை இணையம் வழியாகவும் ஆரம்பித்துள்ளனர். பேரிடர் காலத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை என்பது தனியார் பள்ளிகள் தன்னிச்சையான அதிகாரத்துடன் செயல்படுவதே அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை நம்மில் பலரிடம் ஏற்படுத்தியுள்ளது.