உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.46 கோடியாக அதிகரிப்பு!

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.46 கோடியாக அதிகரிப்பு!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.46 கோடியாக அதிகரிப்பு!

இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் அன்லாக் 2.0 ஆரம்பித்து விட்டது. இருப்பினும் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மாநில முதல்வர்களே ஊரடங்கை நீடித்து வருகின்றனர்.

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.46 கோடியாக அதிகரிப்பு!

இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 46 லட்சத்து 40 ஆயிரத்து 349 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 6 லட்சத்து 8 ஆயிரத்து 856 பேர்  பலியாகி உள்ளனர் . மேலும் 87 லட்சத்து 34 ஆயிரத்து 789 பேர் குணமாகியுள்ளனர்.