அக்டோபர் மாதத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்! கண்காணிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும்- தலைமை செயலர்

அக்டோபர் மாதத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்! கண்காணிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும்- தலைமை செயலர்

பொதுமக்கள் முகக்கவசம் அணிவதையும், தனிநபர் இடைவெளியை கடைப்பிடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலர் சண்முகம் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “அரசின் திட்டங்கள் மற்றும் தேவையான வளர்ச்சிப் பணிகளை கவனத்துடன் மேற்கொண்டு செயல்படுத்த வேண்டும். மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நோயை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து வகையான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். கான்டக்ட் டிரேசிங், தனிமைப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை உருவாக்க வேண்டும். தொடர்ச்சியாக காய்ச்சல் முகாம்களை அமைக்க வேண்டும்.

அக்டோபர் மாதத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்! கண்காணிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும்- தலைமை செயலர்

அதிகப்படியான பாசிட்டிவ் விகிதாச்சாரத்தை குறைக்க வேண்டும் இதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிக அளவில் பரிசோதனைகளை எடுக்க வேண்டும். தற்போது தொழில் வளர்ச்சிக்காக தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.ஆனால் அக்டோபரில் கொரோனா பாதிப்பு உயரக்கூடும் என்பதால் கண்காணிப்பு பணிகளையும் நோய் கட்டுப்படுத்துவதையும், தனிநபர் இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதையும் மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.