‘இந்த மாவட்டங்களில் ‘ மீண்டும் உயரும் கொரோனா : ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!

‘இந்த மாவட்டங்களில் ‘ மீண்டும் உயரும் கொரோனா : ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

‘இந்த மாவட்டங்களில் ‘ மீண்டும் உயரும் கொரோனா : ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் , “கேரளா, கர்நாடகா, மகாரஷ்டிரா உள்பட 19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குடும்ப நிகழ்ச்சிகள் உள்ளது. மாஸ்க் அணியாவிட்டாலும் கொரோனா வராது என்று அலட்சியம் மக்களிடம் உள்ளது.

‘இந்த மாவட்டங்களில் ‘ மீண்டும் உயரும் கொரோனா : ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!

அரசியல் சார்ந்த கூட்டங்களில் பெரும்பாலானோர் மாஸ்க் அணிவதில்லை. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயரக்கூடும்.அரசு இலவசமாக வழங்கும் கொரோனா தடுப்பூசியை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்” என்றார்.

‘இந்த மாவட்டங்களில் ‘ மீண்டும் உயரும் கொரோனா : ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!

தொடர்ந்து பேசிய அவர், “இதுவரை கொரோனா தடுப்பூசி 16 லட்சம் பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. அரசியல் கட்சிகள் தொண்டர்கள் மாஸ்க் அணிய வலியுறுத்த வேண்டும். சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருப்பூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளது. சென்னை தேனாம்பேட்டை, வளசரவாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்தாண்டு பாதிப்பு அதிகம் இருந்த இடங்களில் தற்போது கொரோனா குறைவாக உள்ளது. சென்னையில் கடந்தாண்டு பாதிப்பு குறைவாக இருந்த இடங்களில் தற்போது கொரோனாஅதிகரித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் ” என்றார்.