அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 70 லட்சத்தைக் கடந்தது

 

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 70 லட்சத்தைக் கடந்தது

சீனாவில் கடந்த வருட இறுதியில் கொரோனா பாதிப்பு தொடங்கியது. வெளிநாடுகளுக்குப் பரவத் தொடங்கியது முதலே அதிக பாதிப்பு அமெரிக்காவுக்குத்தான்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 12 லட்சத்து  39 ஆயிரத்து 588 பேர்.  கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 28 லட்சத்து 33 ஆயிரத்து 523 நபர்கள்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 70 லட்சத்தைக் கடந்தது
கொரோனா வைரஸ்

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 65 ஆயிரத்து 065 பேர்.  தற்போது அமெரிக்காவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 70 லட்சத்தைக் கடந்துவிட்டது.

பிப்ரவரி மாதம் 17-ம் தேதி அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 15 மட்டுமே. மார்ச் 17- அது 6905 ஆக அதிகரித்தது. ஆனால், மார்ச் 27 அன்று அதாவது பத்தே நாளில் 1,08,488 எனும் பெரும் எண்ணிக்கைக்குத் தாவியது. அதற்கு அடுத்து எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்க முடியவில்லை அமெரிக்காவால்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 70 லட்சத்தைக் கடந்தது

ஏப்ரல் 01 –ம் தேதி 2 லட்சத்து 24 ஆயிரமாக அதிகரித்தது. நான்கே நாளில் அது 3 லட்சமாக உயர்ந்தது. ஏப்ரல் 27- ம் தேதி 10 லட்சத்தையும் ஜூலை 06-ம் தேதி 30 லட்சத்தையும் ஆகஸ்ட் 06 –ம் தேதி 50 லட்சத்தையும் கடந்தது. ஆகஸ்ட் 26-ம் தேதி 60 லட்சத்தைத் தாண்டியது.

செப்டம்பர் 20-ம் தேதி 70 லட்சத்தைக் கடந்து இன்றைய தேதியில் 70 லட்சத்து 4 ஆயிரத்து 768 என்று உலகின் அதிக பாதிப்புகளைக் கொண்ட நாடு என மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.  இந்தப் பாதிப்பில் கலிபோர்னியாவில் மட்டுமே 10 சதவிகிதத்திற்கு அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவிலிருந்து சிகிசையின் மூலம் மீண்டவர்கள் இன்றைய தேதி வரை 42 லட்சத்து 50 ஆயிரத்து 140 பேர்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 70 லட்சத்தைக் கடந்தது

மார்ச் 01-ம் தேதிதான் அமெரிக்காவில் கொரோனாவால் முதல் மரணம் நடந்தது.  அது மெல்ல மெல்ல அதிகரித்து தற்போது 2 லட்சத்து 4 ஆயிரத்து 118 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மொத்த பாதிப்பில் இந்தியாவும், அதிக மரணம் நடக்கும் நாடாக பிரேசிலும் உள்ளன.