காளஹஸ்தி கோவில் அர்ச்சகருக்கு கொரோனா! பக்தர்களுக்கான அனுமதி ரத்து!

 

காளஹஸ்தி கோவில் அர்ச்சகருக்கு கொரோனா! பக்தர்களுக்கான அனுமதி ரத்து!

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஆந்திராவில் உள்ள முக்கிய கோவில்களில் சோதனை ரீதியில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பக்தர்களுக்கு தரிசனம் வழங்குமாறு ஆந்திர அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி காஹஸ்தி கோவிலில் பக்தர்களை தரிசனத்துக்கு அனுப்புவது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கோவிலுக்குள் உள்ள வரிசைகளில் ஒவ்வொரு பக்தர்களுக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளி இருக்கும் வகையில் வட்டமிட்டனர். இதை தொடர்ந்து சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க திட்டமிட்டிருந்தனர்.

காளஹஸ்தி கோவில் அர்ச்சகருக்கு கொரோனா! பக்தர்களுக்கான அனுமதி ரத்து!

இந்நிலையில் ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் வரும் 12 ஆம் தேதி முதல் பக்தர்களை அனுமதிப்பதற்கான நாளை முதல் சோதனை முறையில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்திருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இந்த நிலையில் கோவிலில் பணி புரியும் அர்ச்சகர் ரமேஷ் என்பவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் அனுமதிக்கும் முடிவை கோவில் நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது.