8 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு!

 

8 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு!

இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

8 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு!

இந்தியாவில் நேற்று 30,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,17,26,507 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 4,25,195 பேர் உயிரிழந்துள்ளனர்.3 கோடியே 8 லட்சத்து 96 ஆயிரத்து 354 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால், “இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வரும் தொற்றில் இருந்து மீண்டு வருவதற்குள் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு பரவுகிறது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை.

8 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு!

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட 8 மாநிலங்களில் கவலையளிக்கும் வகையில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தந்த மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா தொற்றாளர்களை முறையாக வீட்டில் தனிமைப்படுத்தி வைக்காதது தான் கொரோனா மரணத்திற்கு அதிக காரணம் என்று கூறப்படுகிறது. அதில் கேரளாவில் கடந்த சில நாட்களாக நிகழ்ந்து வரும் கொரோனா உயிரிழப்பு மரணங்கள் குறித்து ஆய்வு நடைபெற்று வரகிறது” என்றார்