22 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்!

 

22 மாவட்டங்களில்  அதிகரிக்கும் கொரோனா வைரஸ்!

இந்தியா முழுவதும் 22 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

22 மாவட்டங்களில்  அதிகரிக்கும் கொரோனா வைரஸ்!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி இன்று வரை ஓயாமல் உள்ளது. கொரோனா இரண்டாவது அளவில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக பலர் அவதிப்பட்டு உயிரிழந்தனர். இருப்பினும் ஜூன் மாத தொடக்கத்திற்கு பிறகு கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியது. இன்னும் ஒரு சில வாரங்களில் மூன்றாவது அலையை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என மத்திய , மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன. இதனால் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

22 மாவட்டங்களில்  அதிகரிக்கும் கொரோனா வைரஸ்!

இந்த சூழலில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் , நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 132 நாட்களுக்கு பிறகு 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அதேசமயம் 22 மாவட்டங்களில் மட்டும் கொரோனா தினசரி பாதிப்பு 100க்கும் கீழ் பதிவாகியுள்ளது. இதில் 7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. கேரளாவை பொறுத்தவரை 7 மாவட்டங்களில் கொரோனா தொற்று உயர்ந்துள்ளது. கொரோனா குணமடைந்தோர் விகிதம் 97% ஆக உயர்ந்த நிலையிலும் தற்போது கொரோனா பரவல் என்பது சற்று அதிகரித்தே காணப்படுகிறது.