பேருந்துகளில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய கொரோனா தற்காப்பு வழிமுறைகள்

 

பேருந்துகளில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய கொரோனா தற்காப்பு வழிமுறைகள்

சென்னை: பேருந்துகளில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய கொரோனா தற்காப்பு வழிமுறைகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பேருந்துகளில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய கொரோனா தற்காப்பு வழிமுறைகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி பயணிகள் அனைவரும் பேருந்துகளில் பின்புற படிக்கட்டுகள் வழியாக மட்டுமே ஏற அனுமதிக்கப்படுவார்கள். பேருந்தில் பயணிகள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அதேபோல பேருந்து நிலையங்களில் பயணிகள் சமூக விலகல் முறையை கடைபிடிக்க வேண்டும்.

பேருந்துகளில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய கொரோனா தற்காப்பு வழிமுறைகள்

பேருந்தை பராமரிப்பது தொடர்பான வழிகாட்டுதல்களும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே பேருந்தில் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு பயணம் முடிந்த பின்னரும் பேருந்துகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட வேண்டும். பயணிகள் டிக்கெட் வாங்க பணத்தை ரொக்கமாக கொடுப்பதை தவிர்க்கும் வகையில் மாதாந்திர பாஸ் வாங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். குளிர்சாதன பேருந்துகளில் ஏர் கண்டிஷ்னர் பயன்படுத்தாமல் இயக்க வேண்டும். கியூ ஆர் கோடு முறையில் டிக்கெட் வழங்குவதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்யலாம்.