சென்னையில் கொரோனா தொற்று குறைந்தது… டாஸ்மாக் கடைகளைத் திறக்கத் திட்டம்?

சென்னையில் கொரோனா தொற்று குறைந்தது… டாஸ்மாக் கடைகளைத் திறக்கத் திட்டம்?

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில் அடுத்த வாரம் முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சென்னையில் கொரோனா தொற்று குறைந்தது… டாஸ்மாக் கடைகளைத் திறக்கத் திட்டம்?
கொரோனா பாதிப்பு ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதன் பிறகு தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்படவே மது குடிக்காமல் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. ஏப்ரல், மே மாத தொடக்கத்தில் தமிழ்நாட்டில் கொரோனாவால் இறந்தவர்களை விட மது குடிக்க

சென்னையில் கொரோனா தொற்று குறைந்தது… டாஸ்மாக் கடைகளைத் திறக்கத் திட்டம்?

முடியாமல் தற்கொலை செய்து கொண்ட, போதைக்காக ரசாயனங்களை குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
மே மாதம் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகள்

சென்னையில் கொரோனா தொற்று குறைந்தது… டாஸ்மாக் கடைகளைத் திறக்கத் திட்டம்?

திறக்கப்பட்டன. சென்னை தவிர்த்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால், சென்னை குடிமகன்கள் மது வாங்குவதற்காகவே செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்துக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

சென்னையில் கொரோனா தொற்று குறைந்தது… டாஸ்மாக் கடைகளைத் திறக்கத் திட்டம்?
தற்போது சென்னையில் கொரோனாத் தொற்று குறைந்து வரும் நிலையில் சென்னையிலும் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. அடுத்த வாரம் முதல் திறப்பது தொடர்பான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்று தலைமைச் செயலக வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. பார் வசதி இல்லாமல் மதுக்கடைகளை மட்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது