தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கொரோனா ‘குழு பரிசோதனை’ செய்ய முடிவு!

 

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கொரோனா ‘குழு பரிசோதனை’ செய்ய முடிவு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,626 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 88,377 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கொரோனா ‘குழு பரிசோதனை’ செய்ய முடிவு!

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் குழு பரிசோதனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தனித்தனியாகப் பிசிஆர் சோதனை செய்வதற்கு பதில் குழுவாக ரத்தத்தை சேகரித்து சோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உதாரணமாக பத்து பேரின் ரத்தத்தை சேகரித்து ஒரே நேரத்தில் சோதனை செய்யும் முறையே குழு பரிசோதனை ஆகும். குழு பரிசோதனையை மேற்கொள்ளும் பட்சத்தில் பரவலை தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.