கொரோனா மரணங்கள் : முழுமையான விவரங்களை வெளியிட உத்தரவு!

 

கொரோனா மரணங்கள் : முழுமையான விவரங்களை வெளியிட உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பாதிப்பை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பாதிப்புகள் குறையாததால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா மரணங்கள் : முழுமையான விவரங்களை வெளியிட உத்தரவு!

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பற்றி சென்னை உயர்நீதிமன்றம் இன்று தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, தமிழகத்தில் பாதிப்பு குறைந்துள்ளது. பரிசோதனை போதுமான அளவில் நடத்தப்படவில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். ஊரடங்கு கடுமையாக்குவது பற்றி அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், இறந்தவர்களின் உடல்களை தடுப்பு விதிகளை பின்பற்றி அகற்ற வேண்டும் என்றும் கண்ணியத்துடன் தகனம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து, குழந்தைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிப்பது பற்றிய திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் நீதிமன்ற வளாகங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றலாம் என்றும் அரசுக்கு பரிந்துரைத்தனர். மேலும், கொரோனாவால் ஏற்படும் மரணங்களின் உண்மையான விவரங்களை வெளியிட வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.