11 லட்சத்தை நெருங்கும் கொரோனா இறப்பு எண்ணிக்கை – உலகளவில் கொரோனா

 

11 லட்சத்தை நெருங்கும் கொரோனா இறப்பு எண்ணிக்கை – உலகளவில் கொரோனா

கொரோனா இறப்பு எண்ணிக்கை மளமளவென்று உலகளவில் உயர்ந்துகொண்டே செல்கிறது.

அக்டோபர் 14-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 83 லட்சத்து 70 ஆயிரத்து 296 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 88 லட்சத்து 53 ஆயிரத்து 887 நபர்கள்.

11 லட்சத்தை நெருங்கும் கொரோனா இறப்பு எண்ணிக்கை – உலகளவில் கொரோனா

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 90 ஆயிரத்து 919 பேர். நேற்று மட்டுமே 5,011 பேர் இறந்திருக்கிறார்கள். அந்த அதிகரிப்பின் அடிப்படையில் பார்த்தால் நாளை 11 லட்சத்தை இறப்பு எண்ணிக்கை கடந்துவிடும்.

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 84,25,490 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர் லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 80,90,253 பேரும், இந்தியாவில் 72,39,389 பேரும், பிரேசில் நாட்டில் 51,14,823 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

11 லட்சத்தை நெருங்கும் கொரோனா இறப்பு எண்ணிக்கை – உலகளவில் கொரோனா

இது இன்றைய நிலை. நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ள புதிய நோயாளிகள் பட்டியலில், அமெரிக்காவில் 51,534 பேரும், பிரேசிலில் 11,415 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 63,517 பேராக அதிகரித்துள்ளனர். இந்தியாவில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விடவும் அதிகளவில் உள்ளது.

நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் அமெரிக்காவில், பிரேசில், இந்தியா நாடுகளை விடவும் அதிகம். அமெரிக்காவில் 843, பிரேசிலில் 354, இந்தியாவில் 723 பேரும் நேற்று இறந்திருக்கிறார்கள். இந்தியாவில் இதுவரை 1,10,617 பேர் கொரோனாவால் பலியாகியிருக்கிறார்கள். தற்போது அர்ஜெண்டினாவிலும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டுமே 386 பேர் இறந்திருக்கிறார்கள்.