இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.61% ஆக குறைவு: முழு விவரம் உள்ளே!

 

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.61% ஆக குறைவு: முழு விவரம் உள்ளே!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்திக் கொண்டே வருவதால், அந்தந்த மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. ஆனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும் விரைவில் இந்தியா முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.61% ஆக குறைவு: முழு விவரம் உள்ளே!

அதில், ஒரே நாளில் 93,337 பேருக்கு கொரோனா உறுதியானதால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 53,08,014 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒரே நாளில் 1,247 பேர் கொரோனாவால் உயிரிழந்தயிருப்பதால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 85,619 ஆக அதிகரித்துள்ளதாகவும் கொரோனாவில் இருந்து 42.04 லட்சம் பேர் குணமடைந்து விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா பாதித்த 10.13 லட்சம் பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவின் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.61% ஆக இருப்பதாகவும் குணமடைந்தோர் விகிதம் 79.28% ஆக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.