சென்னையில் கொரோனா மரணம் 10 மடங்கு அதிகரிக்கும்! – எம்.ஜி.ஆர் பல்கலைக் கழக ஆய்வில் அதிர்ச்சி

 

சென்னையில் கொரோனா மரணம் 10 மடங்கு அதிகரிக்கும்! – எம்.ஜி.ஆர் பல்கலைக் கழக ஆய்வில் அதிர்ச்சி

சென்னையில் கொரோனா தொற்றால் ஏற்படக் கூடிய மரணம் 10 மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர் பல்கலைக் கழக ஆய்வாளர் சீனிவாசன் என்பவர் சென்னையில் கொரோனாத் தொற்று எந்த அளவுக்கு இருக்கும் என்று ஆய்வு மேற்கொண்டார். இதன் முடிவுகளை அவர் வெளியிட்டுள்ளார். அதில், ஜூன் 2ம் தேதி சென்னையில் 16,842 பாதிப்புகள் ஏற்படும் என்றும் 146 உயிரிழப்புகள் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டது. உண்மையில் அன்றைய தினத்தில் மட்டும் சென்னையில் 16,585 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இவருடைய கணிப்பு படி ஜூலை 1ம் தேதி சென்னையில் 74 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. 790 பேர் தங்கள் உயிரை இழந்திருப்பார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் கொரோனா மரணம் 10 மடங்கு அதிகரிக்கும்! – எம்.ஜி.ஆர் பல்கலைக் கழக ஆய்வில் அதிர்ச்சி
அடுத்த 15 நாட்களில் அதாவது ஜூலை 15ல் சென்னையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1.5 லட்சமாக உயர்ந்திருக்கும். உயிரிழப்பு 1,54 ஆக இருக்கும். சென்னையில் செப்டம்பர் மாத இறுதியில்தான் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சீனிவாசன் கூறுகையில், “தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அடிப்படையில் இந்த கணிப்புகளை வெளியிட்டுள்ளோம். தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகள் விதித்தால் பாதிப்பு குறைய வாய்ப்புள்ளது. இன்னும் தளவுர்வுகள் வழங்கினால் அதனால் ஏற்படும் விளைவுகள் இன்னும் மோசமாக, அதிர்ச்சியூட்டும் வகையில் இருக்கும். சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் 1.9 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கும்” என்றார்.