Home உலகம் அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் 922 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் 922 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 922 பேர் உயிரிழந்துள்ளனர்.

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 922 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 3 லட்சத்து 98 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 68 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 33 லட்சத்து 51 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவினாலும், கொரோனா பலி எண்ணிக்கை பட்டியலில் அந்நாடு தற்போது 18-வது இடத்திற்கு சென்று விட்டது.

usa

ஆனால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மிக அதிகளவில் உள்ளது. குறிப்பாக கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 109,042-ஆக உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 922 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். எனினும் 4,91,000 பேர் அமெரிக்காவில் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் 18 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

“காரும் போச்சு ,நகையும் போச்சே..” -கல்யாணத்திற்கு வந்தவர் பண்ண வேலையால் கதறிய மாப்பிள்ளை

ஒரு கல்யாண மண்டப வாசலில் சீர் கொடுக்க வைத்திருந்த காரையும் ,நகையையும் யாரோ  கடத்திக்கொண்டு போனதால் மாப்பிள்ளை சோகத்துடன் திருமணம் செய்து கொண்டார்

நிவர் புயலின் கோரம்: மின்கம்பத்தில் மோதி சிறுவன் பரிதாப மரணம்!

வேதாரண்யம் அருகே பெற்றோருக்கு உடை எடுத்து வரச்சென்ற சிறுவன் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே நேற்று நிவர்...

தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் நால்வர் வீதியுலா!

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோவிலில் நால்வர் வீதியுலா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக...

“அமிதாப் வருவார் ,ஒரு கோடி தருவார்” -வாட்ஸ் அப் மெஸேஜால் டேமேஜ் ஆன இரு பெண்கள்.

கோடிக்கணக்கான ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக வாட்ஸ் அப்பில் வந்த மெஸ்ஸேஜை நம்பிய இருவர் , ஐந்து லட்சம் ஏமாந்த கதை பலருக்கு ஒரு பாடமாக...
Do NOT follow this link or you will be banned from the site!