Home உலகம் அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1297 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1297 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 1297 பேர் உயிரிழந்துள்ளனர்.

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 1297 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 3 லட்சத்து 62 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 59 லட்சத்து 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 25 லட்சத்து 83 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவினாலும், கொரோனா பலி எண்ணிக்கை பட்டியலில் அந்நாடு தற்போது 13-வது இடத்திற்கு சென்று விட்டது.

USA

ஆனால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மிக அதிகளவில் உள்ளது. குறிப்பாக கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 101,573-ஆக உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 1297 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் 17 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகளின் தீர்ப்பால் குழப்பம்

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இரு நீதிபதிகளின் மாறுபட்ட கருத்தினால் தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு முதல்...

5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையவில்லை- ராதாகிருஷ்ணன்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், “சுகாதாரப் பணியாளர்களில் 75 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முன்களப் பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளவர்கள் தடுப்பூசி...

அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணம்! அவசர கதியில் அரங்கேறிய நாடகம்

சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதிரடியாக களமிறங்கிய அதிமுக, கடந்த மாதம் 24ஆம் தேதியிலிருந்து விருப்ப மனுக்களை பெற்றது. கடந்த புதன்கிழமையோடு விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் மொத்தமாக 8,240...

இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், தொழிலாளி பலி!

விருதுநகர் ராஜபாளையத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம்...
TopTamilNews