மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவிற்கு கொரோனா உறுதி!

 

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவிற்கு கொரோனா உறுதி!

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வரை சந்தித்து பேசிய, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவிற்கு இன்று கொரோனா உறுதியாகியுள்ளது.

மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவிற்கு இருமல் மற்றும் உடல்வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததால், அவர் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். பரிசோதனையின் முடிவுகள் இன்று வெளியான நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவிற்கு கொரோனா உறுதி!

கடந்த 24ம் தேதி சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் தமிழக முதல்வர் பழனிசாமியின் இல்லத்திற்கு சென்றிருந்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, முதல்வரின் தாயார் புகைப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், முதல்வர் பழனிசாமியுடனும் பேசினார். சென்னை வந்து போன பிறகு அமைச்சருக்கு கொரோனா பரவியதா? அல்லது சென்னை வந்த போதே அவருக்கு அறிகுறி இருந்ததா? என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது. இதன் காரணமாக, முதல்வருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவிற்கு கொரோனா உறுதி!

இந்தியாவில் கொரோனா பரவத்தொடங்கியவுடன் முதன் முதலில் ‘கோ… கொரோனா… கோ…’ என்ற கோஷத்தை சோஷியல் மீடியாக்கள் மூலமாக ட்ரெண்ட் ஆக்கியவர் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே என்பது குறிப்பிடத்தக்கது.