தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவுக்கு கொரோனா உறுதி!

 

தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவுக்கு கொரோனா உறுதி!

தேனி மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதால், அவர் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலின் விகிதம் கணிசமாக குறைந்திருக்கிறது. ஆரம்பக்கட்டத்தில் நாளொன்றுக்கு 5000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 500 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகிறது. அதே போல, உயிரிழப்புகளும் குறைந்த வண்ணமே உள்ளது. 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு உறுதியாவதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மக்கள் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டுமென அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவுக்கு கொரோனா உறுதி!

இந்த நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கடந்த 2 நாட்களாக காய்ச்சல் இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், பரிசோதனையின் முடிவில் அவருக்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.