நீட் தேர்வு எழுத வந்த மாணவனுக்கு கொரோனா உறுதி!

 

நீட் தேர்வு எழுத வந்த மாணவனுக்கு கொரோனா உறுதி!

கரூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது

மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மத்திய அரசு தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. இதன் காரணமாக நீட் தேர்வானது இன்று மதியம் 2 மணிக்கு நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.

நீட் தேர்வு எழுத வந்த மாணவனுக்கு கொரோனா உறுதி!

இந்த தேர்வை 15.97 லட்சம் பேர் எழுத உள்ளனர். இதில் தமிழகத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள உள்ளனர். இதனால் காலை 11 மணிமுதல் மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

நீட் தேர்வு எழுத வந்த மாணவனுக்கு கொரோனா உறுதி!

இந்நிலையில் கரூர் வி.எஸ்.பி கல்லூரியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு மேற்கொண்ட பரிசோதனைக்கான முடிவு இன்று தெரியவந்துள்ளது. தொற்று உறுதியான நிலையில் தேர்வெழுத வந்த மாணவர் தேர்வு மையத்திற்கு வெளியே நிற்க வைக்கப்பட்டுள்ளார். மாணவர் தேர்வெழுத அனுமதிக்கப்படுவாரா? அல்லது திருப்பி அனுப்பி வைக்கப்படுவாரா? என்ற குழப்பம் எழுந்துள்ளது.