புதுச்சேரி அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா உறுதி! – அதிர்ச்சியில் அதிகாரிகள்

 

புதுச்சேரி அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா உறுதி! – அதிர்ச்சியில் அதிகாரிகள்

புதுச்சேரி அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதன் மூலம் அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள், அமைச்சர்கள் தங்களுக்கும் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.
புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சராக இருப்பவர் கந்தசாமி. இவர் வீடு உப்பளம் பகுதியில் உள்ளது. இவரது வீட்டில் வேலை செய்து வந்த பெண்மணிக்கு கடந்த வாரம் கொரோனா உறுதியானது. இதைத் தொடர்ந்து அமைச்சரும் அவரது குடும்பத்தினரும் சுய தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்தனர்.

புதுச்சேரி அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா உறுதி! – அதிர்ச்சியில் அதிகாரிகள்
இந்த நிலையில் அமைச்சரின் தயாராருக்கு கொரோனாத் தொற்று உறுதியானது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், அமைச்சர் கந்தசாமி, அவரது மகனும் புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான விக்னேஷ் என இருவருக்கு கொரோனா உறுதியானது. உடனடியாக அவர்கள் இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் உடல்நிலை இயல்பாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா உறுதி! – அதிர்ச்சியில் அதிகாரிகள்
பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்ற என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயபால் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்ற எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள், முதலமைச்சர், அதிகாரிகள், ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

புதுச்சேரி அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா உறுதி! – அதிர்ச்சியில் அதிகாரிகள்

அப்போது கந்தசாமிக்கு கொரோனா இல்லை என்று முடிவு வந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 31ம் தேதி நடந்த அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.
ஆனால் ஒரு வாரம் கழித்து அமைச்சருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக அவருடன் அருகில் அமர்ந்திருந்த, தொடர்பில் இருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள். அதிகாரிகள் எல்லோரும் தங்களுக்கும் தொற்று ஏற்பட்டிருக்குமா, அதன் மூலம் தங்கள் குடும்பத்தினருக்கு தொற்று பரவியிருக்குமா என்ற அச்சத்தில் உள்ளனர்.