கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா உறுதி!

 

கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா உறுதி!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தீவிர நடவடிக்கையை கையாண்டு வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு அமல்படுத்தப்பட்ட ஒரு சில நாட்களிலேயே பாதிப்பு குறைந்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மக்கள் அரசின் கட்டுப்பாட்டை பின்பற்றி நடந்தால் விரைவில் இரண்டாம் அலையில் இருந்து மீண்ட வர முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா உறுதி!

இதனிடையே அரசு ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவருக்கும் பாரபட்சமின்றி கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. அதில், மாவட்ட ஆட்சியர்கள் மட்டும் விதிவிலக்கல்ல. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கொரோனா உறுதியானது. அவர் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திர சேகர சகாமுரிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பாதிப்பு உறுதியானதையடுத்து அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.