கொரோனா உறுதி செய்யப்பட்ட பிரான்ஸ் அதிபர்!

 

கொரோனா உறுதி செய்யப்பட்ட பிரான்ஸ் அதிபர்!

உலகமே கொரோனா அச்சத்தால் பீடித்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. நேற்று (டிசம்பர் 17 -ம் தேதியளவில் 2,07,61,684 பேர் சிகிச்சை எடுத்து வருகிறார்கள். இவர்களில் 1 சதவ்கிதத்தினர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள்)

கொரோனா உறுதி செய்யப்பட்ட பிரான்ஸ் அதிபர்!

கொரோனா தொற்று நாட்டின் உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் பரவவே செய்கிறது. அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப், அவரின் மனைவி, மகளுக்கு தொற்று உறுதியானது. சிகிச்சைக்குப் பின் சீரானார்கள். தற்போது அமெரிக்காவின் உள்துறை அமைச்சர் டேவிட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இப்போது பிரான்ஸ் நாட்டின திபர் இமானுவேல் மேக்ரானுக்கு கொரோனா தொற்று இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், இமானுவேல் 7 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா உறுதி செய்யப்பட்ட பிரான்ஸ் அதிபர்!

பிரான்ஸ் நாட்டில் இதுவரை 24,27,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதிலிருந்து 1,81,506 பேர் குணமடைந்து விட்டனர். 59,619 பேர் மரணம் அடைந்து விட்டனர். செப்டம்பர் – அக்டோபர் – நவமர் மாதங்களில் பிரான்ஸில் கொரோனா உச்சத்தில் இருந்தது. தற்போது ஓரளவு கட்டுக்குள் இருக்கிறது.