#BREAKING: ராகுல் காந்திக்கு கொரோனா உறுதி!

 

#BREAKING: ராகுல் காந்திக்கு கொரோனா உறுதி!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசுகளும் மத்திய அரசும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்த வண்ணமே உள்ளது. தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், கர்நாடக முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பலருக்கு கொரோனா உறுதியானது.

#BREAKING: ராகுல் காந்திக்கு கொரோனா உறுதி!

இதைத்தொடர்ந்து இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவிக்கு கொரோனா உறுதியானதால், கெஜ்ரிவால் தன்னை தனிமை படுத்திக் கொண்டுள்ளார். இதனிடையே, அரசியல் தலைவர்கள் பலருக்கும் சினிமா பிரபலங்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், லேசான கொரோனா அறிகுறி இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்திருக்கிறது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.