நடிகை ராதிகாவுக்கு கொரோனா.. கைது செய்வதில் சிக்கல்!

 

நடிகை ராதிகாவுக்கு கொரோனா.. கைது செய்வதில் சிக்கல்!

கடந்த 2014 ஆம் ஆண்டு இது என்ன மாயம் பட தயாரிப்புக்காக ரேடியன்ஸ் நிறுவனத்திடமிருந்து மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் ரூ 1.5 கோடி கடன் வாங்கியது. கடனை திரும்பி அளிக்கும்போது மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் காசோலையில் மோசடி செய்தது. அந்த நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருந்த நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா இந்த வழக்கில் சிக்கினர். இதையடுத்து, காசோலை மோசடி செய்ததாக சரத்குமார் ராதிகா மற்றும் பங்குதாரர் ஸ்டீபன் ஆகியோருக்கு எதிராக ரேடியன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

நடிகை ராதிகாவுக்கு கொரோனா.. கைது செய்வதில் சிக்கல்!

எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. செக் மோசடி வழக்கில் சிக்கிய ராதிகாவுக்கும் சரத்குமாருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதே போல, ஸ்டீபனுக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறிய சரத்குமார் மற்றும் லிஸ்டின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையேற்ற நீதிபதிகள், மேல்முறையீடு செய்ய ஏதுவாக சரத்குமார் மற்றும் பங்குதாரர் லிஸ்டின் ஸ்டீபன் தண்டனையை 30 நாட்கள் நிறுத்திவைத்தனர்.

நடிகை ராதிகாவுக்கு கொரோனா.. கைது செய்வதில் சிக்கல்!

இந்த வழக்கு விசாரணையின் போது ராதிகா ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தால் ராதிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். தேர்தல் பிரச்சாரத்தில் கொரோனா பாதிப்பால் அவர் ஆஜராகவில்லையென ராதிகா தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.