கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிக்கு கொரோனா உறுதி!

 

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் 5 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு பல தளர்வுகளை அளித்துள்ளது. அதனால் ஒரு நாளைக்கு 400 முதல் 600 வரை இருந்து வந்த கொரோனா பாதிப்பு, தற்போது நாளொன்றுக்கு 2000 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் முடிந்த வரை பாதுகாப்புடன் வீட்டிலேயே இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். தற்போது செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்தக்கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிக்கு கொரோனா உறுதி!

கடந்த சில காலமாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது. குறிப்பாக காவலர்களும் மருத்துவர்களும் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். அதில் பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் 2000 பேருக்கு நோய்த் தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெய்சந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவர் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.