வேட்பாளருக்கு கொரோனா… அதிர்ச்சியில் திமுக தலைமை!

 

வேட்பாளருக்கு கொரோனா… அதிர்ச்சியில் திமுக தலைமை!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக அதிரடியாக பிரச்சாரம் மேற்கொண்ட வேட்பாளர்கள் பலர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாருக்கு கொரோனா வைரஸ் உறுதியானதைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தகைக்கு கொரோனா உறுதியானது.

வேட்பாளருக்கு கொரோனா… அதிர்ச்சியில் திமுக தலைமை!

அதே போல அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை, பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆனந்தன், காட்பாடி தொகுதி திமுக வேட்பாளர் துரைமுருகன், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி உள்ளிட்ட பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இந்த நிலையில், காரைக்கால் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.எச்.நாஜிமுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

வேட்பாளருக்கு கொரோனா… அதிர்ச்சியில் திமுக தலைமை!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர், கொரோனா அறிகுறி இருந்துள்ளது. உடனே அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இன்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இது திமுகவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ஏற்கனவே நெடுங்காடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்துவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.