‘வேட்பாளர்களுக்கு கொரோனா’.. கவலையில் மக்கள் நீதி மய்யம்!

 

‘வேட்பாளர்களுக்கு கொரோனா’.. கவலையில் மக்கள் நீதி மய்யம்!

அண்ணா நகர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன்ராஜ்க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் அடுத்த முதல்வர் யார் என்பது தெரிய வந்து விடும். கடந்த 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே ஆட்சி புரிந்துள்ளன. இது மாற்ற முடியாத ஒன்றாகவே இருந்தது. ஆனால், இந்த முறை கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாததால் அக்கட்சிகளின் தலைமை ஆட்டம் கண்டுள்ளது. அதை பயன்படுத்திக் கொண்டு மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் மூன்றாவது கட்சியாக உருவெடுத்துள்ளன.

‘வேட்பாளர்களுக்கு கொரோனா’.. கவலையில் மக்கள் நீதி மய்யம்!

மக்கள் நீதி மய்யம் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறது. இருப்பினும், அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் மவுசு கூடியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். சர்வேக்களின் முடிவுகளின் படி, தமிழகத்தில் 10% வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெறும் என்றே தெரிகிறது. குறிப்பாக, இளைஞர்களின் ஆதரவு கமல்ஹாசனுக்கு இருப்பதால் மக்கள் நீதி மய்யம் தமிழகத்தில் காலூன்றுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளில் மக்கள் நீதி மய்யம் முழு வீச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

‘வேட்பாளர்களுக்கு கொரோனா’.. கவலையில் மக்கள் நீதி மய்யம்!

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களுக்கு கொரோனா உறுதியாகி இருப்பது அக்கட்சியினரை கவலையடையச் செய்துள்ளது. சென்னை அண்ணா நகர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன்ராஜ்க்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா உறுதியானதால் கட்சியினர் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். கோவையில் மக்கள் நீதி மய்ய தேர்தல் அறிக்கையை கமல்ஹாசன் வெளியிட்ட போது பொன்ராஜ் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.